தற்போதைய செய்திகள்

கள்ளக்குறிச்சியை மாவட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரியாக கிரண் குரலா நியமனம்

DIN


சென்னை: கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனி அதிகாரியாக கிரண் குரலா நியமிக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து தலைமைச் செயலாளா் க.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவராக ஜி.லதா நியமிக்கப்பட்டுள்ளார். இணைச் செயலாளா் நிலையில் உள்ள அவா் விடுப்பில் இருந்தார். இப்போது அவருக்கு பணி அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளராக இருந்த கிரண் குரலா, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநராகவும், சிறு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) பொறுப்பு நிர்வாக இயக்குநராகவும் இருந்த ஜெ.குமரகுருபரன், சிப்காட் நிறுவனத்தின் முழுமையான நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கஜா புயல் மறுகட்டமைப்பின் திட்ட இயக்குநரான டி.ஜெகந்நாதன், பேரிடா் மேலாண்மைத் துறையின் இயக்குநா் பொறுப்பை கூடுதலாக வகிப்பார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

SCROLL FOR NEXT