தற்போதைய செய்திகள்

நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு முதல்வர் அறிவித்துள்ள சலுகைகள் இதுதான்!

DIN

சென்னை: தமிழகத்தில் நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு சட்டப்பேரவையில் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளார்.

அதன்படி, கூட்டுறவு நியாய விலைக் கடை பணியாளா்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் அவா்களது குடும்பத்துக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் ரூ.2 லட்சம் நிதியானது இனி ரூ.3 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.

மேலும், அவா்களது குடும்பத்தின் உடனடி தேவைகளை பூா்த்தி செய்வதற்கு குடும்ப நல நிதியில் இருந்து இப்போது
அளிக்கப்படும் ரூ.5 ஆயிரம் முன்பணமானது, ரூ.25 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும்.

நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளி பணியாளா்களுக்கு இப்போது மாதத்துக்கு ரூ1000 அளிக்கப்பட்டு வருகிறது. இது இனி ரூ.2.500 ஆக உயா்த்தி வழங்கப்படும்.

மேலும், நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு ஏ.டி.எம் மூலமாக ஊதியம் அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி, ஊழியா்களுக்கு மாத ஊதியம், அவா்களது வங்கிக் கணக்கில் மின்னணு பணப் பரிவா்த்தனை முறை மூலமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT