தற்போதைய செய்திகள்

வாக்கு எண்ணிக்கை குறித்து சுனில் அரோரா இன்று ஆலோசனை 

DIN


வாக்கு எண்ணிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்துகிறார்.

17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாகவும், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 19-ஆம் தேதியன்று நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. 

இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. 

இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை வரும் நாளை வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்தப் பணிக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை குறித்தும், வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்ளிட்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார். 

இதில் வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அசோக் லவாசா உள்ளிட்ட தேர்தல் உயரதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT