தற்போதைய செய்திகள்

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது: பிரதமர் மோடி பேச்சு

DIN


புது தில்லி: புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான எங்களின் பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது என்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டணி தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதமர் மோடி தெரிவித்தார். 

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி மக்களவை உறுப்பினர்களின் கூட்டத்தில் பாஜகவின் மக்களவைக் குழு தலைவராக நரேந்திர மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர். 

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் மக்களவைக் குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து மக்களவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். 

மக்களவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு அமித்ஷா, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

குடும்ப அரசியலில் இருந்து வராத ஒருவர் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்தார் அமித்ஷா. 

பின்னர், நரேந்திர மோடி பேசுகையில், சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்தவர், வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த வெற்றியை பெருமையாக கொண்டாடுகிறார்கள் என்றார். 

மேலும், நான் உங்களில் ஒருவன், உங்களுக்கு சமமானவன் என்றும் என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்த மோடி, புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம், மாற்றுவோம். 

யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்தும் எங்களது சேவையை அங்கீகரிக்கும் வகையில் தேர்தலில் வெற்றியை தந்துள்ளனர். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான எங்களின் பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது. அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம். 

2019 இல் இந்திய மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒருங்கிணைந்து செயல்படுவதே தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என்றும், சேவையை தொடரும் போது மக்களின் ஆசீர்வாதம் தானாகவே கிடைக்கும். விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. 

சுதந்திர இந்தியாவில் அதிக பெண் எம்.பி.க்கள் இந்த மக்களவையில் தான் உள்ளனர். பிராந்திய நலன், தேசத்தின் எதிர்பார்ப்பு இரண்டிலும் சமரசம் செய்துகொண்டதில்லை என்றார் மோடி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT