தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

AnandhBabu

அரபிக் கடலில் உள்ள மஹா புயலானது, அதிதீவிர புயலாக மாறி வரும் 6-ம் தேதி குஜராத் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என்றும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மஹா புயலானது இந்திய துணை கண்ட பகுதியை விட்டு  நகர்ந்து செல்லும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அதன் திசையில் மாற்றம் பெற்று குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

SCROLL FOR NEXT