தற்போதைய செய்திகள்

என் மீது காவி சாயம் பூச முயற்சி: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

DIN


திருவள்ளுவரைப்போல் எனக்கும் பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருவள்ளுவரைப்போல் எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடைபெறுவதாகவும், காவி சாயத்திற்கு திருவள்ளுவரும், நானும் மாட்ட மாட்டோம் என்றும் தப்பித்து விடுவோம் என தெரிவித்தார். 

மேலும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என குறிப்பிட்டார். பாஜகவில் சேருவதற்கு எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை என்றும், பொன்.ராதாகிருஷ்ணனிடம் பாஜகவில் இணைவது குறித்து நான் பேசவில்லை.

என்னை பாஜக உறுப்பினராக காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், என் மீது காவி சாயம் (பாஜக) பூச முயற்சி நடைபெறுவதாக தெரிவித்தார். 

பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்த அவர், மக்கள் பிரச்னைகள் ஏராளமாக உள்ளபோது அதைவிட்டு விட்டு இவ்விவகாரத்தை இவ்வளவு பெரிய சர்ச்சையாக்கியது அற்பத்தனமானது என குறிப்பிட்டார். மேலும் வள்ளுவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர், கடவுள் நம்பிக்கை இருந்தவர் என்றார். 

அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளது குறித்து கேள்விக்கு பதிலளிக்கையில், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் சரி, அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT