தற்போதைய செய்திகள்

சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி 

DIN



சென்னை மாநகர் முழுவதும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், இன்று(நவ.21) வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.  

சென்னை மாநகர் முழுவதும் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, எழும்பூர், புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கிண்டி, தி.நகர், வேளச்சேரி, தரமணி, பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், குன்றத்தூர், மாங்காடு, மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. 

மாநகர் முழுவதும் காலை முதலே பரவலாக மழை பெய்து வருவதால், சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால், பணிக்கும் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் இன்று வியாழக்கிழமை (நவ.21) வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என சென்னை மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதேபோன்று, நாகப்பட்டினம், திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பைஞ்ஞீலியில் வரலாற்று நிகழ்வு: அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT