தற்போதைய செய்திகள்

நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் இளைஞர்களுக்கு அது உணவளிக்காது: ராகுல்காந்தி பேச்சு

DIN


மகாராஷ்டிரா: நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி தெரிவித்தார். 

மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைக்கு வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, மகாராஷ்ட்ராவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

17-வது மக்களவைத் தேர்தல் தேல்விக்கு பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்த 5 மாதங்களுக்கு பின்னர் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள ராகுல்காந்தி மகாராஷ்டிராவில் பேசுகையில், நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது என்றவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது. இஸ்ரோவில் இருந்து 2 நாட்களில் ராக்கெட் அங்கு செல்லவில்லை, பல ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன் நன்மைகளை தற்போது மோடி அனுபவித்து வருகிறார் என்றும் இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் பிரதமர் மோடி என்றார்.

கடந்த 40 ஆண்டுகளில் தற்போது கடுமையான வேலையின்மை நிலவுகிறது. இளைஞர்கள் வேலை கேட்கும்போதெல்லாம், அரசாங்கம் நிலவை பார்க்கச் செல்கிறது. சட்டப்பிரிவு 370 குறித்தும், நிலவை பற்றியும் பேசும் அரசாங்கம், நாட்டை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து மவுனம் காக்கிறது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT