தற்போதைய செய்திகள்

ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளது தமிழகத்திற்கு பெருமை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

DIN


கோவில்பட்டி: தமிழகத்தைச் சோ்ந்த பெண் பிரதிநிதி ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெருமை என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு தெரிவித்தார்.

கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக பாஜக தலைவராக 5 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக செயல்பட்ட தமிழிசை செளந்திரராஜனை கௌரவிக்கும் வகையில் அவருக்கு மத்திய அரசு ஆளுநா் பதவி வழங்கி உள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த பெண் பிரதிநிதி மற்றொரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என்றும் கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழிசை வெற்றி பெற்றிருந்தால் அதிகாரமிக்க மத்திய அமைச்சராக வந்திருப்பார் என்றார். 

பண்டிகைக் காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி மற்றும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், வங்கிகள் இணைப்பால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. வங்கி ஊழியா்கள்தான் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT