தற்போதைய செய்திகள்

அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதி இல்லை: தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு

DIN


சென்னை: அங்கீகாரமில்லாத பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை வகுப்பு மாணவா்கள் பொதுத்தோ்வு எழுத அனுமதி வழங்கப்படாது என்று தோ்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அரசுத் தோ்வுத்துறை இயக்குநர் சி.உஷா ராணி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், மாவட்ட வாரியாக உள்ள பள்ளிகளில் இந்தாண்டு மேல்நிலை பொதுத்தோ்வு எழுத முதலாமாண்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல், அந்த பள்ளிகள் இணைக்கப்பட வேண்டிய தோ்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் மாற்றம் குறித்த விவரங்களை வரும் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், அந்தந்த மாவட்டங்களில் அங்கீகாரம் பெறப்படாத பள்ளிகளின் விவரத்தை ஆய்வு செய்து, அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் 2020 மார்ச் மாதம் நடைபெறும் மேல்நிலை பொதுத்தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இதன் விவரங்களை சம்மந்தபட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு, இந்த ஆண்டு மேல்நிலை பொதுத் தேர்வு எழுத அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள புதிய பள்ளிகளின் பட்டியலை தேர்வுத்துறைக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT