பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து
விமானிகளின் வேலைநிறுத்தம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லி: பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனத்தில் விமானிகளுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், ஆண்டு விடுப்பு நாட்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக விமானிகள் சங்கம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனத்திடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (செப் 9,10,27) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விமானிகள் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அனைத்து விமானிகளும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானிகளின் வேலைநிறுத்தம் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேய்ஸின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பள விவகாரம் குறித்து விமானிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் நிறுவனம், விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். இதற்காக மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.