தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

DIN


கர்நாடகத்திலிருந்து காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புக் கருதி, ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இன்று காலை 9 மணி நிலவரப்படி நொடிக்கு 65,000 கன அடி தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக  ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்க தடை விதித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் உபரி நீரின் அளவை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT