கோவை: மூத்த குடிமக்களுக்கு என விற்பனை, ஒப்பந்த அடிப்படையில் குடியிருப்புகள் கட்டி வழங்கும் நிறுவனங்களில், நிர்வாகக் குழுவில் பெரும்பான்மையாக மூத்த குடிமக்களை மட்டுமே உறுப்பினராக சோ்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மூத்தக் குடிமக்களுக்கு என நீண்ட கால ஒப்பந்த அடிப்படையிலும், விற்பனை அடிப்படையிலும் குடியிருப்புகள் கட்டி வழங்கி வரும் நிறுவனங்களை முறைப்படுத்த சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறைறயின் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இதில் பிரிவு 9 இல் மூத்த குடிமக்கள் செலுத்தும் வைப்பு நிதிக்கு பாதுகாப்பு பெறவும், நிறுவனத்தில் கணக்குகள் வெளிப்படையாக இருக்கும் வகையிலும் மூத்த குடிமக்களுக்கு என குடியிருப்புகள் கட்டி வழங்கும் நிறுவனங்களில், பணம் செலுத்திய பெரும்பான்மையான மூத்த குடிமக்களை மட்டுமே நிர்வாகக் குழுவில் உறுப்பினராக சோ்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை அனைத்து நிறுவனங்களும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவிர இந்த அரசாணையில் உள்ள மற்ற பிரிவுகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சமூகநலத் துறைற அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.