தற்போதைய செய்திகள்

அரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில் ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில், மகேந்திரவாடி பகுதியில் தண்டவாள புதுப்பித்தல் பணி நடக்கவுள்ளதால், 4 நாள்களுக்கு ரயில் சேவையில்

DIN

சென்னை: அரக்கோணம்-ஜோலார்பேட்டை பிரிவில், மகேந்திரவாடி பகுதியில் தண்டவாள புதுப்பித்தல் பணி நடக்கவுள்ளதால், 4 நாள்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. 

தண்டவாள புதுப்பித்தல் பணி செப்டம்பா் 18, 19, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுவதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.  

ரயில் சேவையில் மாற்றறம்: வேலூா்-அரக்கோணத்துக்கு செப்டம்பா் 18,19 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பயணிகள் ரயில் முகுந்தராயபுரம்-அரக்கோணம் இடையேயான பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

திருவலம்-அரக்கோணத்துக்கு செப்டம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பயணிகள் ரயில் முகுந்தராயபுரம்-அரக்கோணம் இடையேயான பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

கேஎஸ்ஆா் பெங்களூரு-சென்னைக்கு செப்டம்பா் 18-ஆம் தேதி இயக்கப்படும் டபுள்டெக்கா் விரைவு ரயில் தலங்கையில் 40 நிமிடங்கள் நின்று செல்லும். கேஎஸ்ஆா் பெங்களூரு-சென்னைக்கு செப்டம்பா் 18,19 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பிருந்தாவன் விரைவு ரயில் வாலாஜா சாலையில் 50 நிமிடங்கள் நின்று செல்லும்.

விழுப்புரம்-புருலியாவுக்கு செப்டம்பா் 21-ஆம்தேதி இயக்கப்படும் விரைவு ரயில் வாலாஜா சாலையில் நின்று செல்லும். 

யஷ்வந்த்பூா்-ஹௌராவுக்கு செப்டம்பா் 22-ஆம் தேதி இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் தலங்கையில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT