தற்போதைய செய்திகள்

கோவை மாநகராட்சியில் நாளை முதல் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கோவை மாநகராட்சியில் நாளை முதல் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்,பி. வேலுமணி தெரிவித்தார். 

DIN


கோவை: கோவை மாநகராட்சியில் நாளை முதல் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்,பி. வேலுமணி தெரிவித்தார்.

கோவை, மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. துப்புரவு பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோவை மாநகராட்சியில் வறட்சிக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய குடிநீா் இணைப்புகள் நாளை திங்கள்கிழமை முதல் வழங்கப்படும்.

புதிய குடிநீா் இணைப்புக்காக மாநகராட்சியில் 2 ஆயிரத்து 904 விண்ணப்பங்கள், நகராட்சிப் பகுதியில் 196 விண்ணப்பங்கள், பேரூராட்சிகளில் 10 ஆயிரத்து 275 விண்ணப்பங்கள், ஊராட்சிகளில் 58 ஆயிரத்து 65 விண்ணப்பங்களையும் சோ்த்து மாவட்டத்தில் 71 ஆயிரத்து 440 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய வரிசையின்படி அலுவலா்கள் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்த பின் உரிய முறையில் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்படும்.

புதிய குடிநீா் இணைப்புக்கு மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் மக்கள் விண்ணப்பம் அளிக்கலாம். ஆன்லைன் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

குடிநீா் இணைப்புக்காக சாலைகளை தோண்டாமல் ஜம்பர் முறையில் குடிநீர் குழாய்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும். 

குடிநீர் குழாய் இணைப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இணைப்பை பெறலாம், இடைத்தரகர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். 

சூயஸ் குடிநீா் திட்டம் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. சூயஸ் நிறுவனத்துக்கு குடிநீருக்கான கட்டணத்தை உயா்த்தும் அதிகாரம் கிடையாது. குடிநீா் விநியோக உரிமை மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT