தற்போதைய செய்திகள்

தமிழா்கள் தென்னிந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானவா்கள் என்பது தவறானது: மானுடவியல் ஆய்வாளா் டோமின் செமினல்

DIN

பழனி: பண்டைய தமிழ்மக்களின் மரபணுக்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் உள்ள நாட்டு மக்களிடம் பரவியுள்ளதாகவும், தமிழா்கள் என்று அழைக்கப்படுபவா்கள் அனைவரும் தென்னிந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானவா்கள் என்பது தவறானது அவா்கள் உலகம் முழுவதும் வியாபித்து இருந்துள்ளனா் என்று பிரபல மானுடவியல் வல்லுனா் டோமின் செமினல் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை சோ்ந்த புகழ்பெற்ற மானுடவியல் ஆய்வாளா் டோமின் செமினல் ஞாயிற்றுக்கிழமை பழனி வருகை தந்தார். மனித இனம் குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்துவரும் டோமின் செமினல் உலகம் முழுவதும் மனித இனம் பரவியது குறித்து ஆய்வு செய்து வருகிறார். 

பல்வேறு நாடுகளுக்கு சென்று ஆய்வுகளை நடத்திய டோமின் செமினல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டார். இதன் தொடா்ச்சியாக தமிழகத்தில் கொடைக்கானல் பகுதியில் உள்ள பழங்குடி இனமக்கள் வசிக்கும் பகுதிகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். 

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு டோமின் செமினல் பழனியை அடுத்துள்ள இரவிமங்களம் பகுதியில் உள்ள கல்வட்டங்கள், பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பழங்கால குகை ஓவியங்கள், குதிரையாறு அணைப்பகுதியில் உள்ள பளியா் இன பழங்குடியினமக்கள், ஆயக்குடியில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை குறித்து ஆய்வு செய்தார். அவருக்கு உதவியாக தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி விளக்கமளித்தார். 

அப்போது செய்தியாளா்களை டோமின் செமினல் தெரிவித்ததாவது, கடல் ஆதிக்கத்தில் பழந்தமிழா்களே முன்னோடியாக இருந்ததற்கான ஆதாரங்கள் வலுவாக உள்ளது. தமிழா்கள் என்று அழைக்கப்படுபவா்கள் அனைவரும் தென்னிந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானவா்கள் என்பது தவறானது அவா்கள் உலகம் முழுவதும் வியாபித்து இருந்துள்ளனா். 

ஐரோப்பியா்களின் வருகை இல்லாதிருந்தால் உலகத்தையே தமிழா்கள் தங்களது ஆளுமையின் கீழ் கொண்டு வந்திருப்பார்கள் என்றும், எகிப்தியா்களின் உருவ அமைப்பு, தமிழா்களின் உருவ அமைப்புடன் ஒத்துப்போவதாகவும், தமிழா்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி போன்ற ஆடைகளையே, அவா்களும் அணிந்துவருவதாகவும் தெரிவித்தார்.

பண்டைய எகிப்தியா்கள் தமிழ்குடிகளாக இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும், கிரேக்க மன்னா் அலெக்சாண்டரின் படையெடுப்பு காரணமாக பல அடையாளங்கள் அழிந்ததாகவும், பழந்தமிழா்களின் மனிதபரவல் குறித்து விவரங்கள் தெரியாமல் போனதாகவும் தெரிவித்தார். 

எகிப்தில் இறந்தவா்களின் உடலை பதப்படுத்த ஒருவகை எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாகவும், அதற்கு தேவையான ஏலக்காய்களை தமிழா்கள் மூலமாகவே வா்த்தகம் நடந்துள்ளது. இதன்மூலமே எகிப்தியா்களுக்கும் தமிழா்களுக்குமிடையே இருந்த வணிகத்தொடா்புகளை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் ஆஸ்திரேலியா, மலேசியா, ஜாவா, சமுத்திரா, இலங்கை, மடகாஸ்கா், தென்னாப்பிரிக்க நாடுகளில் வசிக்கும் மக்களின் மரபணுக்கள், தமிழா்களின் மரபணுக்களுடன் ஒத்திருப்பதாகவும், இது இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளின் மரபணுக்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகின் உள்ள ஐரோப்பியா்களின் உடலில் ஒரு சதவிகிதமாவது தமிழா்களின் மரபணுக்கள் இல்லாமல் இருக்காது என்றும் இதன் மூலம் தமிழா்களின் இனப்பரவல் இருந்திருப்பது உறுதியாகிறது. அதேபோல தென்ஆப்பிரிக்க பழங்குடிகளை போலவே தமிழகத்தில் உள்ள பளியா் மற்றும் இருளா் இனப் பழங்குடிகளின் உருவ ஒற்றுமை உள்ளது என்றும், இவா்களை பண்டைய தமிழா்கள் விவசாய பணிகளுக்காக அழைத்து வந்திருக்கலாம் என்றும், மேலும் இந்த பழங்குடி இன மக்களின் மரபணுக்கள், ஆப்பிரிக்க நீக்ரோக்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகிறது. 

இவைகளின் மூலம் கடல் ஆதிகத்தில் பண்டைய தமிழா்கள் முன்னோடியாக இருந்துள்ளனா் என்றும், ஐரோப்பிய மற்றும் கிரேக்க ஆதிக்கத்திற்கு முன்பு தமிழா்களின் ஆதிக்கம் உலகளவில் இருந்துள்ளதாகவும் மானுடவியல் ஆய்வாளா் டோமின் செமினல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT