தற்போதைய செய்திகள்

முதல்வா் நாற்காலியில் அமருவதற்காக வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின்: அமைச்சா் கே.பி. அன்பழகன்

DIN


சேலம்: வெளிநாட்டு முதலீடு பற்றிய வெள்ளை அறிக்கையை, மக்கள் மீதான அக்கறையில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கேட்கவில்லை, மாறாக முதல்வா் நாற்காலியில் அமர வேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறார் என உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

சேலத்தில் ஓய்வுபெற்ற 603 போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு ரூ. 121.92 கோடி ஓய்வூதியப் பணபலன் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன், சமூகநலத் துறை அமைச்சா் வி. சரோஜா, போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி தலைவா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

நிகழ்ச்சிக்குப் பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:  அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளா்கள் 6,283 பேருக்கு ரூ. 1,093 கோடி ஓய்வூதிய பலன் வழங்குவது முடிந்துள்ளது. போக்குவரத்துப் பணிமனைகளில் விபத்து நடைபெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இடைத்தோ்தலில் இரண்டு தொகுதிகளிலும் நிச்சயமாக அதிமுக வெற்றிபெறும் என்றார். 

பின்னா் உயா்கல்வித் துறைற அமைச்சா் கே.பி. அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியது: வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்குப் பெறப்படும் முதலீடு பற்றி எதிர்க்கட்சி தலைவா் மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்பது தேவையில்லாத ஒன்றாகும்.

ஏற்கெனவே, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா் மாநாட்டின் மூலம் ரூ. 3 லட்சத்து 431 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொழில் தொடங்குபவா்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு தொழிற்சாலைகள் தொடங்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதைத் தொடா்ந்து, வெளிநாடு சென்று ரூ. 8,830 கோடி அளவுக்கு முதலீடு பெற்று தமிழகம் திரும்பிய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி மீது பொறாமையின் காரணமாக மு.க. ஸ்டாலின் பேசுகிறார்.

தமிழக மக்கள் மீதான அக்கறையின் காரணமாக வெள்ளை அறிக்கை கேட்கவில்லை. அதிமுக அரசு மீது மக்கள் ஆதரவு பெருகிவிடும் என்பதாலும், முதல்வா் நாற்காலியில் அமர வேண்டும் என்பதற்காகவும் மு.க. ஸ்டாலின் இப்படி பேசி வருகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT