தற்போதைய செய்திகள்

அடுத்த ராணுவத் தளபதி யார்? தேர்வு பணியில் மத்திய அரசு தீவிரம்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் விரைவில் ஓய்வு பெற உள்ளதை அடுத்து அடுத்த தலைமைத் தளபதியை தேர்வு செய்யும் பணியில்

DIN

புதுதில்லி: இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் விரைவில் ஓய்வு பெற உள்ளதை அடுத்து அடுத்த தலைமைத் தளபதியை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு தீவரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்திய ராணுவ தலைமைத் தளபதியாக விபின் ராவத்தின் மூன்று ஆண்டு பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, 1.2 மில்லியன் பலமுள்ள படையின் அடுத்த தலைமைத் தளபதியை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. மூத்த லெப்டினன்ட் ஜெனரல்கள் பெயர்கள், தளபதி பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய அரசின் பரிசீலனையில் இராணுவப் படைத் துணைத் தலைவர், லெப்டினென்ட் ஜெனரல் எம்.எம். நர்வானே, வடக்கு ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் மற்றும் தெற்கு ராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் சதீந்தர் குமார் சைனி ஆகியோரின் பெயர்கள் தலைமைத் தளபதி பதவிக்கான பரிசீலனையில் உள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ராணுவ தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான கோப்பு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளரால் தொடங்கப்பட்டாலும், இறுதி முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழுவால் எடுக்கப்படுகிறது. தற்போது இந்த பிரதமர் மோடியை தவிர குழுவில் உள்துறைத் அமைச்சர் அமித் ஷா மட்டுமே அமைச்சராக உள்ளார்.

நாட்டின் பாதுகாப்புக் கொள்கையை அமல்படுத்துவதில் ஒன்றிணைந்து செயல்படுவதால், தனது பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களை நியமிப்பதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலும் முக்கிய பங்கு வகிக்கிறார். 

இதனிடையே, விமானப்படையின் தளபதி மார்ஷல் தனோவா இம் மாதம் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அடுத்த விமானப்படை தளபதியாக ஆர்.கே.எஸ் பதவுரியாவை நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

2025ல் ஹூண்டாய் க்ரெட்டா: விற்பனையில் முன்னணி!

SCROLL FOR NEXT