தற்போதைய செய்திகள்

கரோனா நிவாரணப் பொருட்கள் விநியோகம்: அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார்

DIN


திருவாரூர்: திருவாரூரில் கரோனா நிவாரணப்  பொருட்கள் விநியோகத்தை  உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார்

 கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் உள்ள மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ1000 ரொக்கம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி இந்த திட்டத்தை திருவாரூர் துர்கா லயா சாலையில் நியாய விலை கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று தொடங்கி வைத்தார். 

அப்போது அவர் தெரிவிக்கையில் கரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் சமுதாய விலகல்  கடைபிடிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு கார்டுதாரர்கள் எப்போது வரவேண்டும் என்பதற்கு காலம் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவரவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் கடைக்கு செல்லவேண்டும்.

ஒரு ரேஷன் கடையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டுமே ரொக்கம் மற்றும் பொருட்கள் வினியோகம் செய்யப்படும். அவரவருக்கு உரிய காலம் எது என்பது பற்றிய டோக்கன் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொருட்கள் பெருவதற்கான ஒதுக்கப்பட்ட கால அவகாசத்தின்படி சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படும். அதில் குறிப்பிட்டுள்ள நேர அளவின் போதுதான் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு செல்லவேண்டும். டோக்கன் பெறுவதற்காக ரேசன் கடைகளுக்கு யாரும் வரவேண்டியதில்லை. இருமனம் தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைகளுக்கு  பொருட்களின் மதிப்பு ரு.2,93,99,920 ஆகும். 

நிவாரணத் தொகையாக  ரூ.36,74,99,000 வாங்கப்பட உள்ளது. இதன் மூலம்367499 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT