தற்போதைய செய்திகள்

அமேசான் காட்டில் வாழும் பெண்ணுக்கு கரோனா 

DIN


உலகின் மழைக்காடுகள் என வர்ணிக்கப்படும் அமேசான் காட்டில் வாழும் ஒரு பழங்குடியின பெண்ணுக்‍கு கரோனா நோய்த்தொற்று இருப்பதை பிரேசில் உறுதி செய்துள்ளது. உலக தொடர்பு அதிகம் இல்லாத 300க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கிடையே முதல் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் சுமார் 220 நாடுகளுக்‍கு மேல் பரவியுள்ள கரோனா நோய்த்தொற்று, உலக தொடர்பு அதிகம் இல்லாத பிரேசில் நாட்டின் அமேசான் காட்டிலும் தற்போது நுழைந்துள்ளது. அமேசான் காடுகளின் பெரும் பகுதி பிரேசிலில்தான் உள்ளது. இந்த காடுகளில் பல ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெளி உலகத்தொடர்பு அதிகம் இல்லாமல் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று, தற்போது அமேசானின் கொகமா பழங்குடியின பெண்ணான தாக்கியுள்ளது. 20 வயதாகும் அந்த பெண், ஒரு மருத்துவரிடம் மருத்துவப் பணியாளார் பணியாற்றி வந்துள்ளார். அவர் 15 மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 12 நோயாளிகளிடம் தொடர்பில் இருந்து உள்ளார். அவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்பட்டதில் இவர் ஒருவருக்கு மட்டுமே நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அந்த பெண்ணும், அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் ஒரு மருத்துவர் உட்பட நான்கு பேருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

பிரேசில் தற்போது வரை நோய்த்தொற்று 9 ஆயிரத்து 216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், நோய்த்தொற்றால் 365 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றில் இருந்து 127 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT