தற்போதைய செய்திகள்

கரோனா ஆண்களை மட்டுமே குறி வைத்து தாக்குகிறதா? 

DIN


உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கரோனா நோய்த்தொற்று ஆண்களை மட்டுமே குறி வைத்து தாக்குவதாக, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

சீனாவின் வூஹானில் இருந்து பரவத் தொடங்கிய கரோனா, வல்லரசு நாடுகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது. நோய்த்தோற்று பாதிக்கப்பட்டோரின் 12 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

இந்நோய்க்கு ஐரோப்பிய நாடுகளில் உயிரிழந்த 95 சதவீதம் பேரில் இளைஞர்களை விட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் என்றும் அதிலும் குறிப்பாக இதய நோய், நுரையீரல் நோய், சர்க்கரை நோய் உள்ளவர்களையே அதிகம் தாக்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் பாலின விகிதம் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நான்கில் மூன்று பங்கு ஆண்களே உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பலியானவர்களில் பெண்களைவிட 71 சதவிகிதம் பேர் ஆண்கள், 29 சதவீதம் பேர் பெண்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு உறுதியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், பெண்களை விட  அதிகயளவில் புகை பழக்கம், மது அருந்துவர்களில் ஆண்கள் அதிகம் என்பதாலும், அவர்கள் ஏற்கெனவே நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதும், ஆண்கள் அதிகயளவில் வெளியே சென்று வருவது மட்டுமின்றி சமூக விதிகளை சரியாக கடைப்பிடப்பதில்லை அதனால் நோய்த்தொற்றுக்கு ஆண்கள் அதிகயளவில் பலி அதிகரித்திருக்கலாம், பெண்கள் பெரும்பாலும் வீட்டிலே பாதிப்பும், பலியும் குறைவாக இருக்கலாம் என்று அந்த ஆய்வில் கூறப்படுகிறது.

சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளின் ஆய்வில், பிப்ரவரி 11 ஆம் தேதி வரை வைரஸ் நோயால் உயிரிழந்தவர்களில் 2.8 சதவீதம் பேர் ஆண்கள், 1.7 சதவீதம் பேர் பெண்கள் என இறந்துவிட்டதாகவும், பின்னர் இதன் போக்கு மாறியதாக தெரிவித்தது. 

சமீபத்திய ஆய்வின்படி, இத்தாலி, ஜெர்மனி, ஈரான், பிரான்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் உயிரிழந்த நோயாளிகளிடையே பெண்களைவிட ஆண்கள் தான் அதிகயளவில் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT