முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆயிரம் இட்லிகளை மக்களுக்காக சுட்டுத் தந்த பெண்

புதுக்கோட்டை நகரில் இட்லிக்கு மாவு அரைத்தும், இட்லி சுட்டு விற்றும் பிழைத்து வரும் சாதாரண மாற்றுத் திறனாளி பெண், ஊரடங்கு

Updated On : 25 ஏப்ரல், 2020 at 2:40 PM
ஊரடங்கு காலத்தில் உணவுக்காக தவித்து வரும் மக்களுக்காக ஆயிரம் இட்லி சுட்டுத் தந்த பெண்ணுடன் தன்னார்வலர்கள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:01 PM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் இட்லிக்கு மாவு அரைத்தும், இட்லி சுட்டு விற்றும் பிழைத்து வரும் சாதாரண மாற்றுத் திறனாளி பெண், ஊரடங்கு காலத்தில் உணவுக்கு வழியின்றித் தவித்து வரும் மக்களுக்காக சனிக்கிழமை ஆயிரம் இட்லிகளை சுட்டுத் தந்திருக்கிறார்.

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் பல்வேறு தன்னார்வலர்கள் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்கள்.

புதுக்கோட்டை நகரில் இப்படியான பணியை தன்னார்வலர் அருண்மொழி தலைமையிலான குழுவினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இவர்களைத் தொடர்பு கொண்ட போஸ்நகர் 7-ஆம் வீதியைச் சேர்ந்த லோகாம்பாள் என்ற மாற்றுத் திறனாளி பெண், ஒரு நாள் உங்கள் பணியில் நானும் பங்கேற்கிறேன், நாளை காலை வாருங்கள் எனத் தெரிவித்திருக்கிறார். 

இட்லிக்கு மாவு அரைத்தும், இட்லி சுட்டும் விற்பனை செய்துப் பிழைத்து வரும் சாதாரண பெண் அவர். சனிக்கிழமை காலை அவரது வீட்டுக்குச் சென்ற அருண்மொழி குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆயிரம் இட்லிகள் தயாராக, சாம்பாருடன் தனித்தனியே பொட்டலமாகக் கட்டப்பட்டிருந்தது. அதனை எடுத்துக் கொண்டு களத்துக்குச் சென்ற அருண்மொழி குழுவினர் நகரின் பல பகுதிகளுக்குச் சென்று வீதிகளில் ஆதரவற்றுத் திரியும் மக்களுக்கு வழங்கித் திரும்பினர்.

பிறருக்கு உதவுவதற்கு பெரும் பொருட்செல்வம் இருக்க வேண்டிய அவசியமில்லை, எளிய- தாராள மனம் போதும் என்பதை நிரூபிக்கிறார் லோகாம்பாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.