முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 58 பேருக்கு கரோனா: பலி 35-ஆக உயர்வு

ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 58 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை  2,141 -ஆக உயர்ந்துள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 58 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை  2,141 -ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக நாக்பூரில் 20 பேர், ஜோத்பூரில் 15 பேர், அஜ்மீரில் 11 பேர், ஜெய்ப்பூரில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோட்டாவில் 3 பேர், ஹனுமகர் மற்றும் ஜலவர் பகுதியில் தலா 1 என மொத்தம் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாநில சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி, மாநிலத்தில் மொத்தம் 2,141 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 513 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் 244 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். தொற்று காரணமாக இதுவரை மாநிலத்தில் 35 பேர் இறந்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →