முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் கரோனா பாதிப்பு 33,050; பலி 1,074-ஆக உயர்வு

இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 33,050 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

புது தில்லி: இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,074 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வியாழக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி 33,050 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:

வியாழக்கிழமை காலை 9 வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1,718 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 67 போ் உயிரிழந்துவிட்டனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 23,651 ஆக உள்ளது. 8,325 போ் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா். ஒருவா் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாா். 

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 9,915 பேரும்,  குஜராத்தில்  4,082 பேரும், தில்லியில் 3,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →