முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர்

நாட்டில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
நாட்டில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை
பகிர்:

புதுதில்லி: நாட்டில் 2 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக் கிழமை மட்டும் 3,81,027 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 2,02,02,858 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 2-ஆம் தேதி மட்டும் 3,81,027 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 52,979 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 771 பேர் உயிரிழந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →