தற்போதைய செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN


நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன வெழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக அவலாஞ்சி பகுதியில் 390 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் மாவட்டத்தில் 11 இடங்களில் மழை சதம் அடித்துள்ளது. அப்பர் பவானியில் 306 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

உதகை நகரில் தொடர்ந்து பலத்த மழை மற்றும் காற்றில் விழுந்துள்ள மரங்கள், மின்கம்பங்கள்.

மேலும் பந்தலூர் பகுதியில் 161 மி.மீ, நடுவட்டத்தில் 147 மி.மீ, கிளன்மார்கனில் 137 மி.மீ, கூடலூரில் 128 மி.மீ, தேவாலாவில்126 மி.மீ, சேரங்கோட்டில் 136 மி.மீ, எமரால்டில் 145 மி.மீ, பாலகொலா பகுதியில் 111 மி.மீ,  குந்தா பகுதியில் 70 மி.மீ, உதகையில் 40 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

உதகை நகரில் தொடர்ந்து பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக இரண்டாவது நாளாகவும் மின்சாரம் தடைபட்டுள்ளது. உதகை நகரில் ஏராளமான மரங்கள் விழுந்து வருவதால் மின் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT