தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் புதிதாக 593 பேருக்கு கரோனா: 10 பேர் பலி

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 593 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,272-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தானிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் 593 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய (செவ்வாய்க் கிழமை) நிலவரப்படி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 742-ஆக அதிகரித்துள்ளது.

ராஜஸ்தானில் 13,630 பேர் கரோனா தொற்றுக்கு கிசிச்சை பெற்று வரும் நிலையில், 32,900 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT