தற்போதைய செய்திகள்

இலங்கை தேர்தல்: 4மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவு

PTI

இலங்கையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இரண்டு முறை தள்ளிப் போன நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைப்பெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இது குறித்து தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா கூறுகையில்,

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நுவாரா-எலியா நகரத்தில் அதிகபட்சமாக 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் மக்கள் அனைவரும் முகமூடி அணிந்து வாக்களிக்க வரும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்குசாவடிகளும் சுகாதார பணியாளர்கள் கொண்டு முறையாக சுத்தம் செய்யப்படுகிறது என கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT