முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமர்கோயில் பூமிபூஜை: கமலாலயத்தில் தமிழக பாஜக சிறப்பு பிராத்தனை

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜையையொட்டி சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
ராமர்கோயில் பூமிபூஜை: கமலாலயத்தில் தமிழக பாஜக சிறப்பு பிராத்தனை
பகிர்:

சென்னை: அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜையையொட்டி சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை நிகழ்ச்சி உத்தரப்பிரதேசத்தில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சென்னை கலமாலயத்தில் உள்ள தமிழக பாரதிய ஜனதா அலுவலகத்தில் ராமர் படத்திற்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் கமலாலய ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் பூமி பூஜைக்காக அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டியதன் நினைவாக அஞ்சல் தலையையும் அவர் வெளியிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →