தில்லியில் புதிதாக 1,192 பேருக்கு கரோனா பாதிப்பு: 23 பேர் பலி
தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,192 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் உயிரிழந்தனர்.
புது தில்லி: தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,192 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 23 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக தில்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 1,192 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த கரோனா பாதிப்பு 1,42,723 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1,108 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,28,232-ஆக உள்ளது. மொத்த உயிரிழப்பு 4,082-ஆக அதிகரித்துள்ளது.