பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 2.82 லட்சத்தை தாண்டியது
பாகிஸ்தானில் புதிதாக 782 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் புதிதாக 782 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 645 ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர்.
இது தொடர்பாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் 782 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,82,645-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,58,099-ஆக உள்ளது. தற்போது 18,494 பேர் கரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிந்து மாகாணத்தில் 1,22,759 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பஞ்சாப்பில் 94,040 பேருக்கும், கைபர்-பக்துன்க்வாவில் 34,432 பேருக்கும், இஸ்லமாபாத்தில் 15,182 பேருக்கும் பலுசிஸ்தானில் 11,821 பேருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 2,124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) ஒரே இரவில் 20,461 பேர் உட்பட இதுவரை 20,79,333 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.