அமிருதசரஸில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து
அமிருதசரஸின் புறநகரான இபான்-காலா கிராமத்தில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து எற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.
அமிருதசரஸின் புறநகரான இபான்-காலா கிராமத்தில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து எற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில்,
பட்டாசு சேமிப்புக் கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உள்ளே இருந்த பட்டாசுகள் வெடித்ததில் அந்த கட்டடம் முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த தீ விபத்து ஏற்படும் போது உள்ளே யாரும் இல்லாத்தால் உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும், நான்கு தியணைப்பு வாகனங்களால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார்.