தற்போதைய செய்திகள்

ஹாங்காங்கில் புதிதாக 69 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

ஹாங்காங்கில் புதிதாக 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 4,148-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் கரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து ஹாங்காங் அரசு, சீன எல்லையை மூடியது. இதனால் கரோனா பாதிப்பு ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக  அதிகரித்து வருகிறது.

அதன்படி இன்று (திங்கட் கிழமை) புதிதாக 69 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 4,148-ஆக அதிகரித்துள்ளது. இதில் 45 பேர் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். 22 பேருக்கு தொற்று ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. 

இது தொடர்பாக ஹாங்காங் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், கரோனாவால் பாதிக்கப்பட்டு 1,052 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 2,900 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 100 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுவரை 55 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படி தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT