தற்போதைய செய்திகள்

கேரளத்தில் கனமழை: பல மாவட்டங்களுக்கு இளஞ்சிவப்பு நிற எச்சரிக்கை

DIN

புதுதில்லி: கேரளத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவமழை காரணமாக மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கேரளத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால்  அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கன்னூர் ஆகிய மாவட்டங்களுக்கு இளஞ்சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,  இன்று (திங்கட் கிழமை) கேரளத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஆனால் ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கன்னூர், இடுக்கி, கோழிக்கோடு, காசர்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் நாளை (செவ்வாய்க் கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT