தற்போதைய செய்திகள்

மூணாறு நிலச்சரிவு : முதல்வர் மற்றும் ஆளுநர் நேரில் பார்வையிட்டனர்

ANI

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் இன்று மூணாறு ராஜமலை நிலச்சரிவு நடந்த பகுதிக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டனர். மேலும், மீட்புப் பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

ராஜமலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து ஏழாவது நாளாக நடந்து கொண்டிருக்கின்றன. நேற்று (புதன்கிழமை) மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. மொத்த இறப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 15 பேர் காணவில்லை.

52 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள், காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பஞ்சாயத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்கள் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT