ராஜபாளையம் அருகே ரூ.60 மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை எம்.எல்.ஏ. ராஜவர்மன் வெள்ளிக்கிழமை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் வெள்ளிக்கிழமை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த கட்டடம் சேதமடைந்திருந்தது. கடந்த வருட தொடக்கத்தில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
கழிவறைகளுடன் கூடிய இரண்டு மருத்துவர்கள் அறை, பிரசவ அறை, ஆய்வகம், உள் நோயாளிகள் பிரிவு மற்றும் நோயாளிகள் காத்திருக்கும் அறை என நவீன வசதிகளுடன் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய நோயாளிகள் பிரிவு கட்டடம் கட்டப்பட்டது.
இக்கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் இருந்து காலை வீடியோ கான்பிரஸ் மூலம் திறந்து வைத்தார். இந்த கட்டடத்தை சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதார பிரிவின் இணை இயக்குனர் ராம்கணேஷ், ஒன்றிய பொருளாளர் சுப்பையா துரை, ஒன்றிய அவைத் தலைவர் விவேகானந்தன், கவுன்சிலர் ராமலிங்கபுரம் மாடசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் திறந்து வைத்த மருத்துவமனையில் ரத்த அழுத்தம், நாடி மற்றும் உடலின் வெப்ப நிலை குறித்து பரிசோதனை செய்து கொண்டார்.