கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

‘கன்யாஸ்ரீ ’ திட்டதில் 67 லட்சம் பெண்கள் பயன் -மம்தா

மேற்கு வங்க அரசின் கன்யாஸ்ரீ திட்டத்தின் கீழ் 67 லட்ச பெண்கள் பயனடைந்துள்ளனர் என முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

PTI

மேற்கு வங்க அரசின் கன்யாஸ்ரீ திட்டத்தின் கீழ் 67 லட்ச பெண்கள் பயனடைந்துள்ளனர் என முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரையில், மேற்கு வங்க அரசின் கன்யாஸ்ரீ திட்டத்தின் மூலம் கடந்த 7 வருடங்களில் 67 லட்ச பெண்கள் பயனடைந்துள்ளனர். பெண்கள் நம் நாட்டின் சொத்துக்கள். அவர்களை பெற்றதற்கு நாம் பெருமை கொள்வோம் என கூறினார்.

‘கன்யஸ்ரீ திட்டம்’ என்பது பெண்களின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக 18 வயது வரை அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டமாகும்.

இத்திட்டத்தை 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது மேற்கு வங்க அரசு. மம்தா பானர்ஜி அரசு 2017 ஆம் ஆண்டில் தனது கன்யாஸ்ரீ திட்டத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொது சேவைக்காக விருதைப் பெற்றது.

மேலும், நதியா மாவட்டத்தில் கன்யாஸ்ரீ பல்கலைக்கழகம் மற்றும் மாநிலம் முழுவதும் கன்யாஸ்ரீ கல்லூரிகளையும் அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

SCROLL FOR NEXT