மதுரையில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றினார் 
தற்போதைய செய்திகள்

மதுரையில் சுதந்திர தினவிழா : மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றினார்

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியர் வினய் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

DIN

மதுரை: மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியர் வினய் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 72 பயனாளிகளுக்கு ரூ.28.74 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றிய 114 அலுவலர்களுக்கு விருதுகளை வழங்கினார். மேலும் கரோனா தடுப்பு பணிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த தன்னார்வலர்கள் 7 பேருக்கு விருதுகளை ஆட்சியர் வழங்கினார்.
 
தென்மண்டல ஜஜி முருகன், மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குறைவான நபர்களே விழாவில் கலந்து கொண்டனர். வழக்கமாக நடைபெறும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள இடம்பெறவில்லை.

சுதந்திர தின விழாவின்போது தியாகிகள் கௌரவிக்கப்படுவது வழக்கம். நிகழ் ஆண்டில் அவர்களது வீட்டிற்கே சென்று சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT