ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிய தூய்மைப் பணியாளர் 
தற்போதைய செய்திகள்

ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிய தூய்மைப் பணியாளர்

ராசிபுரம் நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை தூய்மைப் பணியாளர் ஏற்றி வைத்தார்.

DIN

ராசிபுரம் : ராசிபுரம் நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக் கொடியை தூய்மைப் பணியாளர் ஏற்றி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை கெளரவிக்கும் வகையில் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 74-வது சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியினை நகராட்சி தூய்மைப் பணியாளர் ஒருவரை ஏற்றி வைக்கும் வாய்ப்பு வழங்கி கெளரவப்படுத்தப்பட்டுள்ளார். 

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா நோய் வைரஸ் தாக்கம் உள்ள நிலையில், இதற்கான கிருமி நாசினி தெளிப்பு, சாலைகள் துப்புரவு, சாக்கடை சுத்தம் செய்தல், நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் மருந்து தெளிப்பு போன்ற தடுப்பு பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட நகராட்சி தூய்மைப் பணியாளர்களை கெளரவிக்கும் வகையில், ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் (பொறுப்பு) ஆ.குணசீலன் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நகராட்சியின் தூய்மைப் பணியாளர் கே.ராஜமாணிக்கம் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.

மேலும் அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பான தூய்மை பணிக்காக பாராட்டப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT