தற்போதைய செய்திகள்

ஸ்ரீநகரில் சுதந்திர தின பாதுகாப்புப் பணியில் முதன்முறையாக பெண்கள்

PTI

ஸ்ரீநகரில் முதன்முறையாக மத்திய ரிசர்வ் காவல் படையின் பெண் காவலர்கள் சுதந்திர தின பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ஸ்ரீநகரின் கோதிபாக் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட எல்லைகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது.

இதில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர்களை பாதுகாப்புப் பணியில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பெண் காவலர் ஒருவர் கூறுகையில், நாங்கள் 232 வது மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இதற்கு முன்பு சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் இருந்தோம்.

எனவே  எல்லைப் பாதுகாப்பு பணி என்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. நாங்களும் ஆண் காவலர்களுக்கு இணையான பயிற்சியைத் தான் பெறுகிறோம் என கூறினார்.

கரோனா தொற்று நோயைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் ரத்து அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. அதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு படை பெண் காவலர்கள் ஒரு பகுதியினர் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்தடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT