திருப்பூரில் தேசியக் கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர் 
தற்போதைய செய்திகள்

திருப்பூரில் சுதந்திர தின விழா : தேசியக் கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரூ.3.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

DIN

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா கல்லூரியில் நடைபற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில்,  15 பயனாளிகளுக்கு ரூ. 3.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் 74 ஆவது சுதந்திர தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 272 அரசு அலுவலர்கள், 7 தன்னார்வலர்கள், 70 காவல்துறையினர் என மொத்தம் 349 முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இதையடுத்து, வருவாய்த்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.3.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமிட்டல், மாநகர காவல் துணை ஆணையர்கள் சுரேஷ்குமார், செல்வக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையாளர் க.சிவகுமார்  தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதைத்தொடர்ந்து, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களைப் பாராட்டி கெளரவித்தார்.

இதன் பிறகு திருப்பூர் குமரன் நினைவுத்தூண் மற்றும் அவரசு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், மாநகர பொறியாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT