முகப்பு
தற்போதைய செய்திகள்

நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் பாஸ்போர்ட்களை அச்சிட முடிவு

நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் பாஸ்போர்ட்களை அச்சிட முடிவு செய்துள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

Updated On : 17 ஆகஸ்ட், 2020 at 2:53 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:38 PM

நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் பாஸ்போர்ட்களை அச்சிட முடிவு செய்துள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதனிடையே நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் பாஸ்போர்ட்களை அச்சிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக நெதர்லாந்து இந்திய தூதரான வேணு ராஜமோனி நாட்டின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, இந்திய மக்கள் பல்வேறு ஆவணங்களை விரைவில் தூதரகத்திற்கு அனுப்ப முடியும், தூதரகத்தில் இருந்து தபால் மூலமாக ஆவணங்களை பெறவும் இயலும். இதன் மூலம் விசாவிற்காக பொதுமக்கள் அலுவலகத்திற்கு வந்து காத்திருக்க வேண்டிய தேவை குறையும். மேலும், தூதரகம் விரைவில் பாஸ்போர்ட்களை அச்சிட முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

நெதர்லாந்தில் சுமார் 40,000 பேர் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இதனை இந்தியத்தூதர் வேணு ராஜமோனி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.