உத்தமபாளையம் பேரூராட்சி பணியாளர்களுக்கு கரோனா உறுதி: அலுவலகம் மூடல்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பணியாளர்களுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பணியாளர்களுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது.
உத்தமபாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலர், பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் மஸ்தூர் பணியாளர் உள்பட பேரூராட்சியின் வாகன ஓட்டுனர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேருக்கு நோய் தொற்று பரவியிருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் வர தடை விதிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.