தெலங்கானாவில் புதிதாக 1,724 பேருக்கு கரோனா
தெலங்கானாவில் இன்று புதிதாக 1,724 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் இன்று புதிதாக 1,724 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இன்று புதிதாக 1,724 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 97,424 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 10 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 729 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 1,195 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 75,186 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 21,509 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.