தற்போதைய செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 1,500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

DIN


திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் 1,500 விநாயகர் சிலைகள் சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை விதித்திருந்தது. 

இந்தநிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், தனியார் இடங்கள், வீடுகளில் சனிக்கிழமை காலை முதலே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இதில், இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் 650 இடங்களிலும், மாவட்டம் முழுவதிலுமாக 1,500 இடங்களில் விநாயகர்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் புதியபேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் 7 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. 

இந்தக் கோவிலில் இருந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், மாநில செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் வழிபாடு நடத்தினர். இந்த சிலைகள் அனைத்தும் சமூக இடைவெளியைக் கடைபிடித்து அருகில் உள்ள நீர் நிலைகளில் சனிக்கிழமை மாலையே விசர்ஜனம் செய்யப்படும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும், பொதுமக்களுக்கு நோய் எதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரகுடிநீரும், ஹோமியோபதி மாத்திரைகளும் வழங்கப்பட்டது. அதே போல, மாவட்டம் முழுவதிலும் சிறியதும், பெரியதுமாக ஆயிரக்கணக்கான சிலைகள் வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT