தற்போதைய செய்திகள்

மதுரை: முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் மெகா கொழுக்கட்டை படையல்

DIN

மதுரை: விநாயகர் சதுர்த்தியையொட்டி  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில்  உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பொதுமுடக்கம் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் இணையவழியில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தேரசுவரர் கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதி பிரசித்தி பெற்றது.  11 அடி உயரம் கொண்ட முக்குறுணி விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியன்று 18 படி பச்சரிசி மாவில் கொழுக்கட்டை படையலிட்டு பூஜைகள் நடத்தப்படும்.

இதன்படி, விநாயகர் சதுர்த்தியையொட்டி முக்குறுணி விநாயகருக்கு அதிகாலையிலேயே  சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. பின்னர் வெள்ளி கவசம் சார்த்தப்பட்டு. அருகம்புல் மாலை, மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து  18 படி பச்சரிசியில் தயாரிக்கட்ட பெரிய கொழுக்கட்டை கொண்டுவரப்பட்டு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விநாயகருக்கு படைக்கப்பட்ட கொழுக்கட்டை, கோயிலுக்கு வெளியே இருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

SCROLL FOR NEXT