புதுதில்லியில் தனியார் பள்ளியில் கணித ஆசிரியருக்கு சம்பளம் தராததால் தனது குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த சந்தையில் துணிப்பைகளை விற்று வருகிறார்.
புதுதில்லி ஷாஹ்தாராவில் ஃபைஸி (வயது 30) என்பவர் தனது வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
இவர் தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று காரணமாக பள்ளியில் சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில், தனது மகள்களின் பள்ளிக் கட்டணத்தை செலுத்த வாராந்திர சந்தையில் துணிப்பைகளை விற்று வருகிறார்.
மார்ச் மாத முதல் போடப்பட்ட பொதுமுடக்கத்திற்கு பிறகு இந்த வார திங்கள்கிழமை முதல் புதுதில்லியில் சந்தைகளை சோதனை முயற்சியாக ஆகஸ்ட் 30 வரை திறக்க அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து ஃபைஸி கூறுகையில், மார்ச் மாதம் முதல் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது பள்ளிப் பெற்றோர்களும் வேலை இல்லாததால் கட்டணம் செலுத்தவில்லை. அதனால் எனது பள்ளி நிர்வாகம் எனக்கு சம்பளம் தர இயலவில்லை.
ஆரம்ப கட்டத்தில் எனது நண்பர்கள் எனக்கு நிதியுதவி செய்தார்கள். ஆனால் அவர்களிடம் மேலும் கேட்ட இயலவில்லை.
தற்போது எனது மகள்களின் பள்ளிக் கட்டணத்தை கட்டுவதற்காக எனது நண்பர்கள் தயாரித்த துணிப்பைகளை விற்க சந்தைக்கு வந்துள்ளேன். இதை விற்பதில் வரும் லாபத்தை வைத்து குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என நம்புகிறேன்.
பகலில் எனது மாணவர்களுக்கு இணைய வழியில் பாடம் எடுத்து வருகிறேன். மாலை நேரத்தில் சந்தைக்கு சென்று துணிப் பைகளை விற்கின்றேன். எந்த காரணத்திற்காகவும் எனது மாணவர்களின் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாகவுள்ளேன்.
கரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் நானும் ஒருவன் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.