வங்கதேசத்தில் அக்.3 வரை கல்வி நிலையங்கள் மூடப்படுகின்றன
வங்கதேசத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
டாக்கா: வங்கதேசத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்றால் வங்கதேசத்திலும் ஏராளாமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே இம்மாத இறுதியுடன் கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 3-ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாது என வங்கதேச அரசு அறிவித்துள்ளது.
தனியார் நிதியை மூலாதாரமாய் கொண்டு இயங்குவதால், மதரசாஸ் கல்வி நிலையம் மட்டும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கல்வி உள்ளிட்ட பள்ளித்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆரம்பப் பள்ளி முதல், மேல்நிலைப்பள்ளி வரையிலான மாணவர்களுக்கு சமூக வலைதளம் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.