தற்போதைய செய்திகள்

ஒடிசா வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

ANI

ஒடிசாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கி இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் குமார் கூறிகையில்,

ஒடிசாவில் பார்கர், நுவாபாடா, ஜஜ்பூர், பலேஸ்வர் மற்றும் பத்ராக் ஆகிய இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததில் மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கு முன் மயூர்பஞ்ச், கியோஞ்சர் மற்றும் சுந்தர்கர் ஆகிய இடங்களில் 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் பார்கர் மற்றும் மயூர்பஞ்சில் பகுதியில் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மேலாண்மை மீட்புப் படை மற்றும் தீயணைப்பு வீரர்களைச் சேர்ந்த 39 குழுக்கள் பணியில் உள்ளனர். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 5 குழுக்கள் இன்று வந்துள்ளனர் என கூறினார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்த தகவல்களை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT