முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் இதுவரை 4 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை : ஐ.சி.எம்.ஆர்.

இந்தியாவில் ஆகஸ்ட்-28 வரை 4.04 கோடி மாதிரிகளை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
இந்தியாவில் 4 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை : ஐ.சி.எம்.ஆர்.
பகிர்:

இந்தியாவில் ஆகஸ்ட்-28 வரை 4.04 கோடி மாதிரிகளை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுட்டுரையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட செய்தியில்,

ஆகஸ்ட் 28 வரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 4,04,06,609 ஆகும். இதில், நேற்று சோதனை செய்யப்பட்ட 9,28,761 மாதிரிகள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 76,472 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.